தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்தி வளாகம்
September 16 , 2019 1899 days 778 0
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் ஆலையாகக் கருதப்படும் “டௌ டியாங் சூரிய ஆற்றல் வளாகத்தை” வியட்நாம் துவங்கியிருக்கிறது.
இது டெய்னின் மாகாணத்தில் 540 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது மற்றும் இது ஆண்டுதோறும் 688 மில்லியன் கிலோவாட் (கிலோவாட் மணிநேர) மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இந்த சூரிய ஆற்றல் வளாகம் மிகப்பெரிய செயற்கை ஏரியான டௌ டியாங் நீர்த்தேக்கத்தில் கட்டப்படுகிறது.
இது ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டலத்தில் 595,000 டன்கள் அளவுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறுவதைத் தவிர்க்கும்.