தென்கிழக்கு ஆசியா, சீனா மற்றும் இந்தியாவுக்கான பொருளாதாரக் கண்ணோட்டம் ஆனது வளர்ந்து வரும் ஆசியாவில் பிராந்திய பொருளாதார வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு குறித்து இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் அறிக்கையாகும்.
இந்த அறிக்கையானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020-24 ஆம் ஆண்டுகளில் 6.6% வளர்ச்சியடையக் கூடும். இது 2013-17 ஆண்டுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரியான 7.4% ஐ விடக் குறைவாக உள்ளது.