தென்கிழக்கு ஆப்பிரிக்க மலைப் பாங்கான தீவுக் கூட்டம் குறித்த ஆய்வு
April 5 , 2024 233 days 210 0
தென்னாப்பிரிக்காவில் மேற்கொள்ளப் பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், தென்கிழக்கு ஆப்பிரிக்க மலைப்பாங்கான தீவுக் கூட்டம் (SEAMA) என்று அழைக்கப்படும் புதிதாக அடையாளம் காணப்பட்ட சுற்றுச்சூழலமைப்பில் முன்னதாக ஆவணப்படுத்தப்படாத பல்லுயிரியலைக் கண்டறியப்பட்டுள்ளது.
மலைப்பாங்கான SEAMA ஆனது, வடக்கு மொசாம்பிக் முதல் தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது உயரமான மலையான மலாவியில் உள்ள முலாஞ்சே மலை வரையில் நீண்டுள்ளது.
SEAMA சுற்றுச்சூழலின் மையப்பகுதியில் குறைந்தது 30 தளங்கள் (மலாவியில் ஒன்பது, மொசாம்பிக்கில் 21) ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த ஆய்வு ஆனது 127 தாவரங்கள், 45 முதுகெலும்புகள் (இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள்) மற்றும் 45 முதுகெலும்பில்லாத இனங்கள் (பட்டாம்பூச்சிகள், நன்னீர் வாழ் நண்டுகள்) ஆகியவற்றுடன், தாவரங்கள் மற்றும் ஊர்வனவற்றின் இரண்டு உள்நாட்டு வகைகளை ஆவணப்படுத்துகிறது.
அங்கு கண்டிப்பாக 22 உள்நாட்டு ஊர்வன இனங்கள் உள்ளன என்ற நிலையில் இவற்றில் 19 காடுகளை வாழிடமாகக் கொண்டவை என்பதோடு, அதில் இதர இனங்கள் பெரும்பாலும் மேட்டு நிலங்கள் மற்றும் பாறை போன்ற பகுதிகளில் காணப் படுகின்றன.
அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் ஒப்பிடும் போது குறிப்பாக வறண்ட காலங்களில், SEAMA பகுதியில் அதிக வருடாந்திர மழைப்பொழிவு மற்றும் ஈரப்பதம் உள்ளது.
சுற்றுச்சூழல் பகுதிகள் (சூழல் மண்டலங்கள்) என்பவை உலகளாவிய வளங்காப்பு முன்னுரிமைகளை அறிவிப்பதற்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.