TNPSC Thervupettagam

தென்கிழக்கு ஆப்பிரிக்க மலைப் பாங்கான தீவுக் கூட்டம் குறித்த ஆய்வு

April 5 , 2024 233 days 209 0
  • தென்னாப்பிரிக்காவில் மேற்கொள்ளப் பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், தென்கிழக்கு ஆப்பிரிக்க மலைப்பாங்கான தீவுக் கூட்டம் (SEAMA) என்று அழைக்கப்படும் புதிதாக அடையாளம் காணப்பட்ட சுற்றுச்சூழலமைப்பில் முன்னதாக ஆவணப்படுத்தப்படாத பல்லுயிரியலைக் கண்டறியப்பட்டுள்ளது.
  • மலைப்பாங்கான SEAMA ஆனது, வடக்கு மொசாம்பிக் முதல் தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது உயரமான மலையான மலாவியில் உள்ள முலாஞ்சே மலை வரையில் நீண்டுள்ளது.
  • SEAMA சுற்றுச்சூழலின் மையப்பகுதியில் குறைந்தது 30 தளங்கள் (மலாவியில் ஒன்பது, மொசாம்பிக்கில் 21) ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • இந்த ஆய்வு ஆனது 127 தாவரங்கள், 45 முதுகெலும்புகள் (இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள்) மற்றும் 45 முதுகெலும்பில்லாத இனங்கள் (பட்டாம்பூச்சிகள், நன்னீர் வாழ் நண்டுகள்) ஆகியவற்றுடன், தாவரங்கள் மற்றும் ஊர்வனவற்றின் இரண்டு உள்நாட்டு வகைகளை ஆவணப்படுத்துகிறது.
  • அங்கு கண்டிப்பாக 22 உள்நாட்டு ஊர்வன இனங்கள் உள்ளன என்ற நிலையில் இவற்றில் 19 காடுகளை வாழிடமாகக் கொண்டவை என்பதோடு, அதில் இதர இனங்கள் பெரும்பாலும் மேட்டு நிலங்கள் மற்றும் பாறை போன்ற பகுதிகளில் காணப் படுகின்றன.
  • அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் ஒப்பிடும் போது குறிப்பாக வறண்ட காலங்களில், SEAMA பகுதியில் அதிக வருடாந்திர மழைப்பொழிவு மற்றும் ஈரப்பதம் உள்ளது.
  • சுற்றுச்சூழல் பகுதிகள் (சூழல் மண்டலங்கள்) என்பவை உலகளாவிய வளங்காப்பு முன்னுரிமைகளை அறிவிப்பதற்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்