தென்கொரியாவின் பழமையான தானியக் களஞ்சியமானது மிகப் பெரிய வண்ணமயமான கலைப் படைப்பாக மாற்றப்பட்டு உலகின் மிகப் பெரிய வெளிப்புறச் சுவர் ஓவியமாக கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.
இது துறைமுக நகரமான இன்சியானில் உள்ள மிகப்பெரிய சேமிப்பு கலன்களின் வெளிப்பகுதியில் 23,688 சதுரமீட்டர் அளவில் ஒரு இளம் வயது சிறுவனின் பதின்பருவத்தை நோக்கிய பயணத்தை சித்தரிக்கிறது.
அந்நகரத்தின் அரசாங்க மற்றும் துறைமுக அதிகாரிகளால் திறந்து வைக்கப்பட்ட இது பழைய தொழிற்சாலைக் கட்டிடங்களின் மீதான எதிர்மறையான பார்வையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.