TNPSC Thervupettagam

தென்னாப்பிரிக்காவில் காந்தி தொடர்பான ரயில் சம்பவத்தின் 130 ஆண்டுகள் நிறைவு

June 11 , 2023 406 days 263 0
  • ஐஎன்எஸ் திரிசூல் கப்பலானது பல வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூரும் வகையில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்குப் பயணம் மேற்கொண்டது.
  • இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுக்கு இடையிலான அரசுமுறை உறவுகள் மீண்டும் தொடங்கப்பட்ட 30வது ஆண்டு விழாவும் இதில் அடங்கும்.
  • 130 ஆண்டுகளுக்கு முன்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பீட்டர்மரிட்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு சம்பவத்தையும் இது குறிக்கிறது.
  • வணிகரான தாதா அப்துல்லாவுக்கு ஒரு சட்ட ஆலோசகராகப் பணியாற்றுவதற்காக என்று காந்தி 1893 ஆம் ஆண்டில் டர்பனுக்கு வந்தார்.
  • 1893 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதியன்று, டிரான்ஸ்வால் மாகாணத்தில் உள்ள பிரிட்டோரியாவிற்கான ஒரு பயணத்தின் போது, அவர் முதலில் பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்திற்கு வந்தார்.
  • உரிய பயணச்சீட்டு வாங்கிய பிறகு முதல் வகுப்பு பெட்டியில் அவர் அமர்ந்திருந்தார்.
  • ஆனால் ஒரு ஐரோப்பியரின் உத்தரவின் பேரில் அவர் பின்னர் அந்தப் பெட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டார்.
  • அந்த நாட்களில், 'கூலிகள்' மற்றும் வெள்ளையர் அல்லாதவர்கள் முதல் வகுப்புப் பெட்டிகளில் பயணிப்பதற்கு அனுமதிக்கப் படவில்லை.
  • இன ஒடுக்குமுறைக்கு எதிரான காந்தியின் போராட்டத்திற்கும் சத்தியாக்கிரகத்தின் தோற்றத்திற்கும் இந்தச் சம்பவமானது பெரும் தூண்டுதலாக அமைந்ததாகக் கருதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்