TNPSC Thervupettagam

தென்னிந்தியாவின் பழமையான சமஸ்கிருதக் கல்வெட்டு

December 30 , 2019 1667 days 654 0
  • இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் கல்வெட்டியல் துறையானது தென்னிந்தியாவின் மிகப் பழமையான சமஸ்கிருத கல்வெட்டைக் கண்டுபிடித்து உள்ளது.
  • இந்தக் கள ஆய்வானது ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள செப்ரோலு என்ற கிராமத்தில் செய்யப் பட்டது.
  • கி.மு 207 ஆம் ஆண்டில் விஜயன் என்னும் சாதவாகன மன்னனால் வழங்கப்பட்ட  இந்த கல்வெட்டில் சமஸ்கிருதம் மற்றும்  பிராமி எழுத்துக்கள் உள்ளன.
  • இதுவரை கி. பி 4 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட இக்ஷவாகு மன்னர் எஹவால சாந்தமுலாவின் நாகார்ஜுன கொண்டா கல்வெட்டானது தென்னிந்தியாவின் மிகப் பழமையான சமஸ்கிருதக் கல்வெட்டாக கருதப்பட்டது.
  • இந்தக் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பானது ‘சப்தமாத்ரிகா’ என்ற வழிபாடு இருந்ததற்கான ஒரு பழமையான கல்வெட்டுச் சான்றாகக் கருதப் படுகின்றது.
  • சப்தமாத்ரிகா என்பது இந்து மதத்தில் வணங்கப்படும் ஏழு பெண் தெய்வங்களின் குழுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்