TNPSC Thervupettagam

தென்பெண்ணை ஆறு

May 23 , 2019 2015 days 2624 0
  • 300 டன்கள் எடை கொண்ட பகுதியளவு செதுக்கப்பட்ட பாறை கர்நாடகாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நடவடிக்கை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பேரண்டப்பள்ளி என்ற கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் பாதையை மாற்றியமைத்துள்ளது.
  • தென் பெண்ணை ஆறு தமிழில் தென்பெண்ணையாறு என்றும் கன்னடத்தில் தக்சின பினகினி என்றும் அழைக்கப்படுகின்றது. மேலும் இது “பொன்னையாறு” என்றும் அறியப்படுகின்றது.
  • இந்த ஆறு கர்நாடக மாநிலத்தில் சென்னகேசவா குன்றுகளின் தென்கிழக்கு திசையிலிருந்தும் சிக்பல்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி குன்றுகளின் வடமேற்கு திசையிலிருந்தும் உற்பத்தியாகின்றது.
  • இது கர்நாடகா மாநிலத்திற்குள்ளே பெங்களூருவிற்கு வடக்கே 85 கிலோ மீட்டர் தூரம் பாய்கின்றது.
  • இது உருவான இடத்திலிருந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் இடமான தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் வரை மொத்தம் 400 கிலோ மீட்டர்கள் தூரம் பயணிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்