திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி அறிஞர்கள், ஆலம்பாடி அருகே தென்பெண்ணை நதிக் கரையில் இருந்து இரண்டு நடு கற்களைக் கண்டெடுத்துள்ளனர்.
ஆலம்பாடி அருகே உள்ள வேடியப்பன் கோவிலில் இருந்து இந்த இரண்டு கற்களை அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
அந்தக் கற்கள் போரில் இறந்தப் பழங்குடி இனத் தலைவரின் நினைவாக நடப்பட்ட அரிய வகை ‘ஆநிரை’ கற்களாகும்.
பல்லவ மன்னன் சிங்க விஷ்ணுவின் 11 ஆம் ஆண்டு ஆட்சியின் போது இந்தக் கல் எழுப்பப் பட்டதாக அந்தக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
அவை கி.பி. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
பழங்குடியினரின் எதிரிகளால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்கும் முயற்சியில் இந்தப் போர்வீரர்கள் இறந்ததாக இந்தக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.