TNPSC Thervupettagam

தென் ஆப்ரிக்காவில் காந்தி அருங்காட்சியகம்

October 19 , 2017 2465 days 923 0
  • தென் ஆப்பிரிக்காவின் கடற்கரை நகரமான டர்பனில் முன்பு காந்தி சொந்தமாக இருந்த ஒரு சிறிய நிலத்தில்  ஒரு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.
  • மகாத்மா காந்தியின் வாழ்க்கையும்  அறப்போராட்டமும்   சர்வதேச  அளவில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என விளக்கும் வகையில் இந்த அருங்காட்சியம் தொடங்கப்பட்டுள்ளது.
  • மகாத்மா காந்தி நினைவு அறக்கட்டளையின் ஆலோசனையுடன் டர்பன் உள்ளுர் வரலாற்று அருங்காட்சியகமானது புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் “டர்பனில் காந்தி” எனும் கண்காட்சியை தொடங்கியுள்ளது.
  • தென்னாப்பிரிக்காவில் காந்தி வசித்து வந்த போது இந்தியர்கள் மீது காட்டப்பட்ட பாரபட்சத்தை எதிர்த்து பொது போராட்டங்களை நடத்த இந்த நிலத்தை 1897 ல் காந்தி வாங்கினார்.
  • நேட்டால் இந்திய காங்கிரஸ் (Natal Indian Congress) தென் ஆப்பிரிக்காவின் நேட்டால் பகுதியில் இந்தியர்கள் மீது வெள்ளையர்கள் காட்டிய பாரபட்சத்திற்கு எதிராகப் போராட உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
  • 1914 ஆம் ஆண்டு டர்பன் நகரை விட்டு வெளியேறியபோது அந்த நிலத்தை நேட்டால் இந்திய காங்கிரசுக்கு வழங்கிவிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்