TNPSC Thervupettagam

தென் கொரியாவில் அல்லுலோஸ்

November 12 , 2024 17 days 70 0
  • தென் கொரிய நாடானது அல்லுலோஸ் என்ற செயற்கை இனிப்பூட்டிக்கானச் சிறந்த சோதனைக் களமாக மாறியுள்ளது.
  • இது ஸ்டீவியா போன்ற சர்க்கரை மாற்றுகளுக்கு சாத்தியமான போட்டியாக திகழும்.
  • அத்திப்பழம், கிவி மற்றும் இன்ன பிற பழங்களில் இயற்கையாகவே காணப்படும், அல்லுலோஸ் அமெரிக்க மற்றும் தென் கொரிய நாட்டு கட்டுப்பாட்டு அமைப்புகளால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • இது சர்க்கரையைப் போல 70% இனிப்பு கொண்டது மற்றும் கலோரி இல்லாதது.
  • ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள், பாதுகாப்பு குறித்த மதிப்பீடு மேலும் தேவைப் படுகின்ற ஒன்று என்பதால் "ஒரு புதுமையான உணவு" என்று இதனை வகைப்படுத்தியுள்ளன.
  • நீண்ட கால ஆபத்துக்களை குறிப்பிட்டுக் காட்டி எடைக் கட்டுப்பாட்டிற்கு சர்க்கரை அல்லாத இனிப்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்