TNPSC Thervupettagam

தென் கொரிய நாட்டின் கருவுறுதல் விகிதம்

March 5 , 2024 136 days 192 0
  • ஏற்கனவே உலகின் மிகக் குறைவானதாக உள்ள தென் கொரியாவின் கருவுறுதல் விகிதத்தில் 2023 ஆம் ஆண்டில் மோசமான அளவில் சரிவு பதிவானது.
  • 2022 ஆம் ஆண்டில் 0.78 ஆக இருந்த ஒரு தென் கொரியப் பெண்ணின் இனப்பெருக்க வயது வாழ்க்கையில் சராசரியாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது 0.72 ஆகக் குறைந்துள்ளது.
  • இது 2024 ஆம் ஆண்டில் மேலும் 0.68 ஆக குறையும் என்று முந்தைய கணிப்புகள் மதிப்பிடுகின்றன.
  • இது ஒரு நிலையான மக்கள்தொகைக்கு தேவையான எண்ணிக்கையான ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைப் பிறப்பு என்ற எண்ணிக்கையை விட மிகவும் குறைவாக உள்ளது மற்றும் இது 2015 ஆம் ஆண்டில் 1.24 ஆகப் பதிவான விகிதத்தினை விட பின்தங்கியுள்ளது.
  • தென் கொரியா, பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு நாடுகளுள் மிக மோசமானப் பாலின ஊதிய இடைவெளியையும் கொண்டுள்ளது.
  • தென் கொரிய நாட்டுப் பெண்கள் ஆண்களை விட மூன்றில் இரண்டு பங்கு அதிக வருமானத்தை ஈட்டுகின்றனர்.
  • மேலும், 2022 ஆம் ஆண்டில் சீனா மற்றும் ஜப்பான் போன்ற அண்டை நாடுகளில், பதிவான கருவுறுதல் விகிதம் ஆனது முறையே 1.09 மற்றும் 1.26 என்ற குறைந்த அளவை எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்