TNPSC Thervupettagam

தெற்காசியாவின் பலவீனமானப் பொருளாதார நாடு

January 22 , 2023 547 days 299 0
  • உலக வங்கியின் தரவுகளின் படி, தெற்காசியாவின் பலவீனமானப் பொருளாதாரம் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது.
  • நடப்பு ஆண்டில் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் 2 சதவீதமாக குறையும்.
  • இது அதன் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாத மதிப்பீட்டில் இருந்து இரண்டு சதவீதப் புள்ளிகள் வீழ்ச்சியைக் காணும்.
  • கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம், அந்நாட்டின் நிச்சயமற்றப் பொருளாதார நிலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது.
  • பாகிஸ்தானின் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற ஒரு அளவினை எட்டியுள்ள நிலையில், இது மூன்று வாரங்களுக்கான வெளிநாட்டுக் கட்டணங்களை செலுத்தக் கூட போதுமானதாக இல்லை.
  • கோதுமை விலை 57 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ள நிலையில், கோதுமை மாவின் விலையும் 41 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • பாகிஸ்தானில் 15 கிலோ மாவு பை ஆனது 2,050 ரூபாய்க்கு விற்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்