TNPSC Thervupettagam

தெற்காசியாவில் உயிரினங்களின் ஏற்பமைவிற்கான முதல் மையம்

August 13 , 2023 342 days 212 0
  • IUCN அமைப்பின் உயிரினங்களின் ஏற்பமைவிற்கான ஆணையமானது தெற்கு ஆசியாவில் உயிரினங்களின் ஏற்பமைவிற்கான முதல் மையத்தை அமைப்பதற்காக இந்திய வனவிலங்கு அறக்கட்டளையுடன் (WTI) கை கோர்த்துள்ளது.
  • இது உலகில் உயிரினங்களின் ஏற்பமைவிற்கான 10வது மையமாகவும், தெற்கு ஆசியாவில் இவ்வகையிலான முதல் மையமாகவும் இருக்கும்.
  • இந்தியாவில் 92,037 வகையான விலங்கினங்கள் உள்ள நிலையில் அவற்றில் பூச்சி இனங்கள் மட்டும் 61,375 இனங்கள் ஆகும்.
  • இந்தியாவில் மட்டும், அந்த எண்ணிக்கையின் இரண்டு மடங்கிலான உயிரினங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படாமல் உள்ளன.
  • இது இயற்கைக்கான மதிப்பினை வழங்கும் மற்றும் அதனை நன்குப் பாதுகாக்கும் வகையிலான ஒரு உலகத்தை உருவாக்குவதற்கான ஒரு குறிக்கோளுடன் உருவாக்கப் படுகிறது.
  • இந்த கூட்டு முன்னெடுப்பானது, வனவிலங்கு வல்லுநர்கள் மற்றும் சிறப்பு வல்லுநர் குழுக்களின் வளங்காப்பு முயற்சிகளை மேம்படுத்துவதையும், இந்தியாவின் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்