TNPSC Thervupettagam

தெற்காசிய பிராந்தியத்தின் ஐந்தாவது பொது கொள்முதல் மாநாடு

February 6 , 2018 2357 days 746 0
  • தெற்காசிய பிராந்தியத்தின் ஐந்தாவது பொது கொள்முதல் மாநாடு (South Asian Region Public Procurement Conference ) அண்மையில் புது டெல்லியில் நடைபெற்றது,
  • மத்திய நிதி அமைச்சகத்தின் பொது கொள்முதல் பிரிவு (Public Procurement Division) மற்றும் அனைத்திந்திய மேலாண்மை சங்கம் மூலமாக இந்த கருத்தரங்கை இந்திய அரசு ஒருங்கிணைத்துள்ளது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு- “பொது கொள்முதல் மற்றும் சேவை விநியோகிப்பு”.
  • பொது கொள்முதல் தொடர்பான அம்சங்களின் திறனான செயல்பாட்டிற்காக உலக வங்கி (World Bank), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank), இஸ்லாமிய வளர்ச்சி வங்கி (Islamic Development Bank) ஆகியவையிடமிருந்து நிதியுதவி பெற்று செயல்படுத்தப்பட்டு வரும் தெற்காசிய பொது கொள்முதல் பிணையத்தின் [South Asia Region Public Procurement Network - SARPPN] கீழ் இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
  • 8 தெற்காசிய நாடுகளின் பொது கொள்முதல் துறையின் தலைமை அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்கெடுப்பாளர்கள் ஒருவரையொருவர் சந்திக்கவும், பொது கொள்முதலில் உள்ள சிறந்த நடைமுறைகள் மற்றும் புத்தாக்கங்களை தங்களிடையே பகிர்ந்துக் கொள்ளவும் ஒரு மேடையை ஏற்படுத்தித் தருவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்