TNPSC Thervupettagam

தெற்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ

January 13 , 2025 9 days 82 0
  • சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கொடியக் காட்டுத்தீயால் லாஸ் ஏஞ்சல்ஸ் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது.
  • இந்த தீ விபத்தானது, இது வரையில் குறைந்தது 11 பேரின் உயிர்களைப் பலி வாங்கி உள்ளது மற்றும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பிற கட்டமைப்புகளை அழித்துள்ளது.
  • 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் பதிவான கடந்த இரண்டு குளிர்காலங்கள் ஆனது லாஸ் ஏஞ்சல்ஸ் பிராந்தியத்திற்கு வழக்கத்திற்கு மாறான பனிப் பொழிவினை வழங்கின.
  • சாண்டா அனா நிகழ்வினால் தூண்டப்படும் காட்டுத்தீ கலிபோர்னியாவின் நிலப் பரப்பில் இயற்கையாகவே ஏற்படும் நிகழ்வாகும்.
  • கிரேட் பேசின் பகுதி மீது உயர் அழுத்தம் உருவாகி கலிபோர்னியாவின் கடற்கரையில் அழுத்தம் குறைவாக இருக்கும்போது சாண்டா அனா காற்று வீசுகிறது.
  • அழுத்தத்தில் உள்ள வேறுபாடு, தெற்கு கலிபோர்னியாவின் கிழக்கு மற்றும் வடக்கே, கிரேட் பேசின் பகுதியின் நிலப்பரப்பு சார் பாலைவனங்களிலிருந்து மலைகள் வழியாக பசிபிக் பெருங்கடலை நோக்கி மிக சக்தி வாய்ந்த காற்றின் இயக்கத்தைத் தூண்டுகிறது.
  • அங்கு மிகவும் குறைந்த ஈரப்பதம் நிலவுவதால் அது தாவரங்களை உலரச் செய்து, அவற்றை எளிதில் தீப்பற்றக் கூடியதாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்