தெற்கு-தெற்கு ஒத்துழைப்பிற்கான ஐக்கிய நாடுகள் தினம் – செப்டம்பர் 12
September 13 , 2020 1532 days 467 0
தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு தினமானது 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று ஐக்கிய நாடுகளினால் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இந்தத் தினமானது வளரும் நாடுகளிடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பைச் செயல்படுத்துவதற்காகவும் ஊக்கப்படுத்துவதற்காகவும் 1978 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஒரு செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்ட தினத்தை அனுசரிக்கின்றது.
இது நீடித்த வளர்ச்சிக்கான செயல்திட்டம் 2030 என்பது உள்ளிட்ட சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்ட வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை நோக்கிப் பணியாற்றுகின்றது.