TNPSC Thervupettagam

தெற்கு லோனாக் ஏரி

October 10 , 2023 459 days 310 0
  • சிக்கிம் மாநிலத்தின் வடமேற்கில் 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு பனிப் பாறை ஏரியான லோனாக் ஏரி இடைவிடாத மழை காரணமாக உடைந்து, தாழ்வானப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்தியது.
  • கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட மோசமானப் பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
  • இது தீஸ்தா ஆற்றின் நீர்மட்டத்தை உயர்த்தி மாங்கன், காங்டாக், பாக்யோங் மற்றும் நாம்ச்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது.
  • தெற்கு லோனாக் ஏரியைப் போன்ற பனிப்பாறை ஏரிகள், உருகும் பனிப்பாறைக்கு முற்பகுதியில், மேலே அல்லது கீழே அமைந்திருக்கும் பெரிய நீர்நிலைகளாகும்.
  • பனிப்பாறை ஏரிகள் பெரும்பாலும் நிலையற்ற பனிக்கட்டி அல்லது தளர்வான பாறை மற்றும் சிதைவுகளால் ஆன வண்டல் மூலம் தடுத்து கட்டுப்படுத்தப் படுவதால், அவற்றில் நீர் பெருகும் போது அவை மிகவும் ஆபத்தானதாக மாறுகின்றன.
  • அவற்றைச் சுற்றியுள்ள எல்லை தடுப்புகள் உடைந்தால், பெரிய அளவிலான நீர் மலைகளினூடே பாய்ந்து தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும்.
  • இது பனிப்பாறை ஏரி உடைப்பினால் ஏற்படும் வெள்ளம் அல்லது GLOF என்று அழைக்கப் படுகிறது.
  • பூகம்பங்கள், தீவிர கன மழை மற்றும் பனிச்சரிவுகள் உள்ளிட்ட பல காரணங்களால் GLOF ஏற்படக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்