CITES உடன்படிக்கையின் 19வது பங்குதாரர்களின் மாநாடானது, சமீபத்தில் தெற்கு வெள்ளை காண்டாமிருகங்களின் நிலையை Iவது பின் இணைப்பிலிருந்து IIவது பின் இணைப்பிற்கு மாற்றுவதற்கான முன்மொழிதலை ஏற்றுக் கொண்டது.
நமீபியா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகள் இந்த முன்மொழிவினை முன் வைத்தன.
IIவது பின் இணைப்பில் உள்ள விலங்குகள் அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவற்றின் வாழ்வினை பாதுகாக்கச் செய்வதற்காக அத்தகைய இனங்களில் மேற்கொள்ளப்படும் வர்த்தகமானது ஒழுங்கு படுத்தப் படுகிறது.
இது வெள்ளை காண்டாமிருகங்களை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான திட்டத்திற்கு அனுமதிக்கிறது.
தெற்கு வெள்ளை காண்டாமிருகம் ஆனது வெள்ளை காண்டாமிருக இனங்களின் இரண்டு துணை இனங்களில் ஒன்றாகும் என்ற நிலையில், அதன் மற்றொரு இனம் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் ஆகும்.
இது உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான விலங்குகளில் ஒன்றாகும்.
இது வெள்ளை காண்டாமிருகங்களின் மிகவும் பரவலாகக் காணப்படும் மற்றும் பொதுவான கிளையினங்களில் ஒன்றாகும்.
இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அச்சுறுத்தல் நிலைக்கு அருகில் உள்ள ஒரு இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.