தெலங்கானா – வெப்ப அலையினைக் குறிப்பிட்ட மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிப்பு
April 21 , 2025 2 days 64 0
தெலங்கானா மாநில அரசானது, வெப்ப அலை மற்றும் வெப்பத் தாக்கு நோய் போன்ற பாதிப்பு நிலைமைகளை "குறிப்பிட்ட மாநிலம் சார்ந்த ஒரு பேரிடர்" என்று அறிவித்து உள்ளது.
இது போன்ற பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF) 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்து உள்ளது.
2024 ஆம் ஆண்டில், அங்கு ஐந்து மாவட்டங்களைத் தவிர, மீதமுள்ள 28 மாவட்டங்களில் குறைந்தது 15 நாட்கள் வெப்ப அலைகள் நிலவியதாகக் கண்டறியப்பட்டது.
இந்திய வானிலைத் துறையால் வெப்ப அலைக்கான விளக்கமானது வரையறுக்கப் பட்டு உள்ளது.
குறிப்பிட்ட மாநிலம் சார்ந்த பேரிடர் என்று வெப்ப அலைகளை ஏற்கனவே தமிழ்நாடு, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய சில மாநிலங்கள் அறிவித்துள்ளன.