TNPSC Thervupettagam

தெலுங்கானாவில் 2025 ஆம் ஆண்டில் OBC இட ஒதுக்கீடு

March 21 , 2025 11 days 69 0
  • சாதி வாரிக் கணக்கெடுப்பின் ஒரு அடிப்படையில் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் முதல் மாநிலமாக தெலுங்கானா மாற உள்ளது.
  • அரசு வேலை வாய்ப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான (BCs) இட ஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த்தச் செய்வதற்கான முக்கிய மசோதாவை அம்மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.
  • தெலுங்கானாவின் இந்தப் புதிய இட ஒதுக்கீட்டு மசோதா ஆனது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என்று 42 சதவீதமும், பட்டியலிடப்பட்டச் சாதியினருக்கு 18 சதவீதமும், பட்டியலிடப் பட்டப் பழங்குடியினருக்கு 10 சதவீதமும் என்று இடங்களை ஒதுக்க முன் மொழிகிறது.
  • இது முறையே தற்போதுள்ள 29 சதவீதம், 15 சதவீதம் மற்றும் 6 சதவீதம் என்பதிலிருந்து அதிகரிக்கப் பட உள்ளது.
  • இதன் மூலம், உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 50 சதவீத இட ஒதுக்கீட்டின் வரம்பை 70 சதவீதமாக உயர்த்த தெலுங்கானா இலக்கு வைத்துள்ளது என்பதால் இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் அவசியமாகும்.
  • பீகார் மற்றும் கர்நாடகா ஆகியவற்றிற்குப் பிறகு சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்திய மூன்றாவது மாநிலம் தெலுங்கானா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்