தெலுங்கு மொழி பேசும் ஹைதராபாத் பகுதிகள் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டு ஒரு ஒருங்கிணைந்த மாநிலமாக உருவானது.
2013 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழுவானது தெலுங்கானாவை ஒரு தனி மாநிலமாக நிறுவச் செய்வதற்கான ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றியது.
தெலுங்கானா மாநிலத்தினை நிறுவுவதற்கான 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதாவானது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது.
இந்த மசோதா 2014 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் தேதியன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இறுதியாக அந்த ஆண்டு ஜூன் 02 ஆம் தேதி அன்று தெலுங்கானா மாநிலமாக உருவாக்கப் பட்டது.