TNPSC Thervupettagam

தேங்காய் எண்ணெய் குறித்து உச்சநீதிமன்றம்

January 1 , 2025 58 days 220 0
  • உச்ச நீதிமன்றமானது, சிறிய குடுவைகளில் உள்ள தேங்காய் எண்ணெயினை வரி விதிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே சமையல் எண்ணெய் என வகைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
  • மேலும், தேங்காய் எண்ணெயைச் சிறியக் குடுவைகளில் அடைத்து, தலைமுடிக்குப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படலாம் என்று முத்திரையிடப்பட்டால், அது 1985 ஆம் ஆண்டு மத்திய கலால் வரிச் சட்டத்தின் கீழ் தலைமுடி பயன்பாட்டிற்கான எண்ணெய் என வகைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உயுள்ளது.
  • தற்போது, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையின் கீழ், சமையல் எண்ணெய்க்கு 5% வரி விதிக்கப்படுகிறது, அதே நேரத்தில் தலைமுடி பயன்பாட்டிற்கான எண்ணெய் மீது 18% வரி விதிக்கப்படுகிறது.
  • சமையல் எண்ணெயாகச் சந்தைப்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயானது 2006 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டத்திற்கு இணங்க வேண்டும், மேலும், சமையல் தர நெகிழி கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்