TNPSC Thervupettagam

தேசத்தின் நலன் குறித்த அறிக்கை

April 12 , 2024 98 days 140 0
  • அப்பல்லோ மருத்துவமனைகள் நிறுவனம் ஆனது, “தேசத்தின் நலன்” எனப்படும் அதன் முதன்மையான 4வது வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையானது, இந்திய நாட்டினை "உலகின் புற்றுநோயின் தலைநகரம்" என்று குறிப்பிட்டுள்ளது.
  • மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உள்ள மக்கள் தங்களது குறைந்த வயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
  • இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான சராசரி வயது ஆனது கணிசமாக குறைந்துள்ளது.
  • இந்தியாவில் பெண்கள் மத்தியில் ஏற்படும் பொதுவான புற்றுநோய் பாதிப்புகள் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் கருப்பைப் புற்றுநோய் ஆகியனவாகும்.
  • ஆண்கள் மத்தியில், நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய் மற்றும் விதைப்பை (புரோஸ்டேட்) புற்றுநோய் ஆகியவை மிகவும் பொதுவான பாதிப்புகளாகும்.
  • 2016 ஆம் ஆண்டில் 9 சதவீதமாக இருந்த உடல் பருமன் விகிதம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • இதே காலகட்டத்தில் 9 சதவீதமாக இருந்த உயர் இரத்த அழுத்த பாதிப்புகள் ஆனது 13 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • இந்தியர்களில் மூன்றில் ஒருவர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையினால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற நிலையில் மூவரில் இருவர் உயர் இரத்த அழுத்தப் பாதிப்பிற்கு முந்தைய நிலையினால் பாதிக்கப் பட்டுள்ளனர் மற்றும் 10 பேரில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்