இத்தினமானது முதன்முறையாக 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 அன்று அனுசரிக்கப் பட்டது.
இது உலகெங்கிலும் உள்ள கண்டங்களுக்கிடையேயான பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சுழலுக்கு உகந்த முறையிலான வணிகத்திற்கு உதவுதல் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல், இந்தியக் கடல்சார் போக்குவரத்துத் துறையில் சிறப்பாகப் பங்காற்றியவர்களுக்கு “வருணா” என்ற விருதானது வழங்கப் படுகின்றது.
மும்பையிலிருந்து ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு (இலண்டன்) பயணம் மேற்கொண்ட சிந்தியா நீராவிப் போக்குவரத்து நிறுவனத்தின் முதலாவது கப்பலான SS லாயல்டி கப்பல் தனது பயணத்தை ஆரம்பித்த 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் தேதி அன்று இந்தியக் கப்பல் போக்குவரத்தானது முதன்முறையாகத் தொடங்கப் பட்டது.
உலகக் கடல்சார் போக்குவரத்து தினமானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று அனுசரிக்கப்பட இருக்கின்றது.
சர்வதேசக் கடல்சார் போக்குவரத்து அமைப்பின்படி, “நீடித்த பூமிக்கான நீடித்த கப்பல் போக்குவரத்தானது” 2020 ஆம் ஆண்டின் உலகக் கடல்சார் போக்குவரத்து தினத்தின் கருத்துருவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.