TNPSC Thervupettagam

தேசியக் கட்சி அந்தஸ்து - ஆம் ஆத்மி கட்சி

December 16 , 2022 865 days 626 0
  • ஆம் ஆத்மி கட்சியானது, தேசியக் கட்சிகள் என்ற குழுவில் சேர உள்ளது.
  • அரவிந்த் கெஜ்ரிவால் 2012 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியை (AAP) தொடங்கினார்.
  • ஒரு தேசியக் கட்சி என்பது குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் இரண்டு சதவீத மக்களவைத் தொகுதிகளில், அதாவது 11 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
  • ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் எவரும் மக்களவை உறுப்பினர்களாக இடம் பெற வில்லை.
  • இதற்கான மற்றொரு நிபந்தனை என்னவென்றால், அந்தக் கட்சியானது நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தினைப் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆனால், இக்கட்சி டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பெரிய ஆதரவுடன் அரசினை அமைத்துள்ளது.
  • கோவா மாநிலத்தில், இந்தக் கட்சி ஆறு சதவீத வாக்குகளைப் பெறுதல் / இரண்டு இடங்களில் வெற்றி பெறுதல் என்ற நிபந்தனையைப் பூர்த்தி செய்கிறது.
  • தற்போது எட்டு தேசியக் கட்சிகள் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • அவை பா.ஜ.க., காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்தியப் பொதுவுடைமை கட்சி, இந்தியப் பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்), மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியனவாகும்.
  • இந்த அந்தஸ்தின் காரணமாக, ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னமானது (துடைப்பம்) இந்தியா முழுவதும் மாற்றப்படாமல் இருக்கும்.
  • தேசியக் கட்சிகள் ஆனது பொதுத் தேர்தல்களின் போது, ஆகாசவாணி மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றில் ஒலிபரப்பு மற்றும் ஒளிபரப்பு அலைவரிசைகளைப் பெறுகின்றன.
  • அது தனது கட்சியின் தலைமை அலுவலகத்தினைக் கட்டமைப்பதற்காக வேண்டி அரசு நிலத்தைப் பெறும்.
  • அங்கீகரிக்கப்பட்ட ‘மாநில’ மற்றும் ‘தேசிய’ கட்சிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே ஒரு முன்மொழிபவர் மட்டுமே தேவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்