TNPSC Thervupettagam

தேசியக் கல்வி தினம் - நவம்பர் 11

November 12 , 2019 1842 days 793 0
  • மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் தேசியக் கல்வி தினம் அனுசரிக்கப் படுகின்றது.
  • இத்தினம் 2008 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப் படுகின்றது.
  • சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர் ஆசாத் ஆவார்.
  • இவர் 1953 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பல்கலைக்கழக மானியக் குழுவை (University Grants Commission - UGC) நிறுவினார். இவர் இந்திய அறிவியல் நிறுவனம், கட்டமைப்பு & திட்டமிடல் பள்ளி ஆகியவற்றை நிறுவினார். இவர் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுவப் படுவதற்கு மூளையாகச் செயல்பட்டார்.
  • நாட்டில் கல்வி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக சங்கீத நாடக அகாடமி (1953), சாகித்ய அகாடமி (1954) மற்றும் லலித் கலா அகாடமி (1954) ஆகியவற்றை அவர் நிறுவினார்.
  • சுதந்திர இந்தியாவில் கல்வி முறையின் கட்டமைப்புகளை அமைப்பதிலும் கல்வி முறையின் தற்போதைய செயல்திறனை மதிப்பிடுவதிலும் ஆசாத்தின் பங்களிப்பை நினைவில் கொள்வதற்கான தினம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்