TNPSC Thervupettagam

தேசியக் குடிமைப் பணிகள் தினம் 2025 - ஏப்ரல் 21

April 29 , 2025 13 hrs 0 min 21 0
  • இத்தினமானது, இந்திய நாட்டின் நிர்வாக அமைப்பின் ஒரு முதுகெலும்பாக விளங்கும் அரசுப் பணியில் ஈடுபட்டுள்ள குடிமைப் பணியாளர்களின் மகத்தான முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக கொண்டாடப்படுகிறது.
  • இந்தத் தேசிய அளவிலான அனுசரிப்பு ஆனது முதன்முதலில் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
  • 1947 ஆம் ஆண்டில் இந்தத் தினத்தில் தான் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் டெல்லியில் உள்ள மெட்கால்ஃப் ஹவுஸில் தகுதிகாண் நிர்வாக அதிகாரிகளுடன் உரையாற்றினார்.
  • அவர் குடிமைப் பணியாளர்களை "இந்தியாவின் எஃகு சட்டகம்" என்று குறிப்பிட்டார்.
  • கார்ன்வாலிஸ் பிரபு ‘இந்தியக் குடிமைப் பணிகளின் தந்தை’ என்று அழைக்கப் படுகிறார்.
  • 1793 ஆம் ஆண்டு சாசனச் சட்டம் ஆனது பிரித்தானியர்கள் ஆதிக்கம் வகித்த குடிமைப் பணிகளை நிறுவியது.
  • வெல்லஸ்லி பிரபு, குடிமைப் பணி ஆட்சேர்ப்புப் பணிகளுக்காக இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக 1800 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் வில்லியம் கோட்டை கல்லூரியை நிறுவினார்.
  • 1853 ஆம் ஆண்டு சாசனச் சட்டம் ஆனது, அரசுப் பணிகளில் நிலவி வந்த அரசியல் கட்சிப் பின்னணி சார்பான நியமன அமைப்பு முறையை நீக்கி, அனைவருக்குமானப் போட்டித் தேர்வுகளை அறிமுகப்படுத்தியது.
  • குடிமைப் பணிகள் ஆணையமானது 1854 ஆம் ஆண்டில் இலண்டனில் நிறுவப்பட்டது.
  • மெக்காலே பிரபுவின் 1856 ஆம் ஆண்டு அறிக்கையானது தகுதி அடிப்படையிலான குடிமைப் பணியினை அறிமுகப்படுத்தியது.
  • 1922 ஆம் ஆண்டு முதல், ICS தேர்வுகள் இந்தியாவில் முதன்முதலாக அலகாபாத்தில் நடத்தப்படத் தொடங்கின.
  • 1926 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று அரசுப் பணியாளர் ஆணையம் இந்தியாவில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்