இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று தேசியக் கைத்தறி தினத்தை அனுசரிக்கின்றது.
இத்தினமானது முதன்முறையாக 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 அன்று அனுசரிக்கப்பட்டது.
பிரிட்டீஷ் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினையை எதிர்த்து போராடுவதற்காக கொல்கத்தா டவுன் ஹாலில் 07–08–1905 அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை அனுசரிப்பதற்காக ஆகஸ்ட் 07 என்ற தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இத்தினமானது நாட்டில் உள்ள கைத்தறித் தொழிலாளர்களை கௌரவிப்பதற்காகவும் கைத்தறித் தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் இந்தியப் பொருளாதாரத்திற்குக் கைத்தறித் தொழிற்சாலைகளின் பங்கை எடுத்துக் காட்டுவதற்காகவும் அனுசரிக்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டின் தேசியக் கைத்தறி தினத்தின் முக்கிய நிகழ்வானது ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரில் நடத்தப் படவிருக்கின்றது.