அரசியலமைப்புச் சபையானது, 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதியன்று இந்திய தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டதை இது நினைவு கூருகிறது.
இது அந்த வரலாற்று சாதனையைக் கொண்டாடுவதோடு, இந்திய மக்களின் லட்சியம், பன்முகத் தன்மை மற்றும் ஒற்றுமையினைக் குறிப்பிடுகிறது.
இராட்டைச் சக்கரம் அல்லது 'சர்க்கா'விற்கு ஒரு மாற்றாக கொடியில் இடம் பெற்றுள்ள அசோகச் சக்கரம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது உண்டாகி இருந்த தன்னம்பிக்கை மற்றும் எதிர்ப்பைக் குறிக்கிறது.
இந்த மாறுதலானது பத்ருத்-தின் தியாப்ஜியால் முன்மொழியப்பட்டு, மகாத்மா காந்தி அவர்களால் ஆதரிக்கப்பட்டது.
2002 ஆம் ஆண்டில், இந்தியக் கொடிக் குறியீட்டின் திருத்தங்கள் தேசியக் கொடி தொடர்பான குடிமக்களின் உரிமைகளை விரிவுபடுத்தியது.