தடுப்பு மருந்தின் முக்கியத்துவம் குறித்து நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
இந்தத் தினமானது தேசிய நோய்த் தடுப்பு தினம் என்றும் அழைக்கப் படுகின்றது.
போலியோ சொட்டு மருந்து முதல்முறையாக வழங்கப்பட்ட தினமான 1995 ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று இத்தினமானது முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
தேசியத் தடுப்பு மருந்து தினத்தை கொண்டாடுவதன் பின்னணியில் உள்ள முக்கியமான நோக்கம் போலியோவுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் உலகிலிருந்துப் போலியோவை முற்றிலுமாக ஒழித்தல் ஆகியவையாகும்.
குறிப்பு
2020 ஆம் ஆண்டின் உலக நோய்த் தடுப்பு வாரமானது ஏப்ரல் கடைசி வாரத்தில் (ஏப்ரல் 24 முதல் 30 வரை) கொண்டாடப்பட்டது.
2020 ஆம் ஆண்டின் உலக நோய்த் தடுப்பு வாரத்தின் கருப்பொருள், ‘அனைவருக்கும் தடுப்பு மருந்து’ என்பதாகும்.