TNPSC Thervupettagam

தேசியத் தன்னார்வ இரத்த தான தினம் - அக்டோபர் 01

October 4 , 2022 691 days 235 0
  • இரத்தத் தானம் செய்வதன் முக்கியத்துவம் பற்றியும், இந்த உன்னத நோக்கத்துடன் தொடர்புடைய நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வைப் பரப்புவதை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது டாக்டர் ஜெய் கோபால் ஜாலி அவர்கள் ஆற்றிய மகத்தானப் பங்களிப்பை அங்கீகரித்து அவருடையப் பிறந்தநாளினை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப் படுகிறது.
  • இவர் இந்தியாவில் தன்னார்வ இரத்தத் தான இயக்கத்திற்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தார்.
  • மேலும், இவர் இரத்த மாற்றத் துறையில் சர்வதேச அளவில் பிரபலமாக அறியப்பட்ட நிபுணர் ஆவார்.
  • இவர் "இந்தியாவில் இரத்தமாற்ற மருத்துவத்தின் தந்தை" என்று கருதப்படுகிறார்.
  • இந்திய இரத்தமாற்று மற்றும் நோய் தடுப்பூக்கி ஆய்வியல் சங்கமானது 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று இந்தத் தினத்தினை முதன்முறையாக அனுசரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்