தேசியத் திறன் மேம்பாட்டு இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா
July 16 , 2017 2687 days 2594 0
மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of Skill Development and Entrepreneurship - MSDE) சார்பில் தேசிய திறன் மேம்பாட்டு இயக்கத்தின் (Skill India Mission) இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவானது, சர்வதேச இளைஞர் திறன் தினத்தன்று (World Youth Skill Day) கொண்டாடப்பட்டது.
இந்தியத் திறன் வளர்ச்சி இயக்கம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தையில் உதித்தத் திட்டம் ஆகும். முதல் சர்வதேச இளைஞர் திறன் தினமான 15 ஜூலை 2015 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
சமீபத்தில் சரக்கு மற்றும் சேவை வரி பயிற்சியாளர்களுக்கு சான்றளிக்கக் கூடிய வகையில் முன்னோடித் திட்டமான பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா வின் கீழ் தேசிய அளவிலான பயிற்சித் திட்டம் ஒன்றினை மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
திறன் இந்தியா (Skill India)
தொடங்கப்பட்ட நாள் : 15.07.2015
குறிக்கோள் : 2022 க்குள் 40 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு திறன் பயிற்சி அளிப்பது.
உள்ளடங்கும் திட்டங்கள்:
தேசிய திறன் மேம்பாட்டு இயக்கம் (National Skill Development Mission)
தேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுக் கொள்கை, 2015 (National Policy for skill development and Entrepreneurship, 2015)