TNPSC Thervupettagam

தேசியத் தூய்மைக் காற்று திட்டத்தின் கீழ் புதிய இலக்கு நிர்ணயம்

October 2 , 2022 658 days 445 0
  • தேசியத் தூய்மைக் காற்றுத் திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்குள் நகரங்களில் காணப்படும் நுண்துகள்களின் செறிவை 40 சதவிகிதமாகக் குறைப்பதற்கு இந்திய அரசு ஒரு புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
  • இது 2024 ஆம் ஆண்டிற்குள் நுண் துகள்களின் செறிவை 20 முதல் 30 சதவீதம் வரை குறைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட முந்தைய இலக்கின் ஒரு புதுப்பிப்பாகும்.
  • தேசியத் தூய்மைக் காற்று திட்டத்தின் கீழ் உள்ள குறிப்பிட்ட நகரம் சார்ந்த திட்டங்கள் புதிய இலக்குகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
  • சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூற்றுப்படி, தேசியத் தூய்மைக் காற்று திட்டத்தின் கீழ் உள்ள இலக்குப் பூர்த்தி செய்யாத 131 நகரங்களில் 95 நகரங்களை 2017 ஆம் ஆண்டு நிலைகளுடன் ஒப்பிடும் போது 2021 ஆம் ஆண்டில் PM10 என்ற நுண்துகள் அளவை அவை குறைத்துள்ளன.
  • இலக்குப் பூர்த்தி செய்யாத நகரங்கள் என்பது 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக தேசியச் சுற்றுப்புறக் காற்றின் தர நிலைகளில் இருந்து பின்தங்கிய நிலையில் உள்ள நகரங்களாகும்.
  • 20 நகரங்களானது, ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம் என்ற அளவில் நிர்ணயிக்கப் பட்ட வருடாந்திரச் சராசரி PM10 செறிவிற்கான தேசியத் தர நிலைகளைப் பூர்த்தி செய்துள்ளன.
  • தேசியத் தூய்மைக் காற்று திட்டமானது, 2019 ஆம் ஆண்டில் காலக்கெடுவிற்குட்பட்ட இலக்குடன் காற்றின் தர மேலாண்மைக்கான முதல் தேசியக் கட்டமைப்பாக தொடங்கப் பட்டது.
  • இந்தியா முழுவதும் PM10 மற்றும் PM2.5 ஆகிய நுண்துகள்களின் செறிவைக் குறைக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாசுபடுத்திகளின் செறிவை ஒப்பிடுவதற்கான அடிப்படை ஆண்டாக 2017 ஆம் ஆண்டானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்