TNPSC Thervupettagam

தேசியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தரவு

January 2 , 2024 198 days 209 0
  • இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கையானது, 2023 ஆம் ஆண்டில் 8 கோடியைத் தாண்டியது.
  • இது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியில் இருந்த அளவை விட 22.4% உயர்வைப் பதிவு செய்துள்ளது.
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து, 2023 ஆம் ஆண்டில் தேசியப் பங்குச் சந்தையில் அதிக எண்ணிக்கையிலான புதிய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஈடுபட்டனர்.
  • அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடம் பெற்றுள்ளது.
  • சதவீத அடிப்படையில், மிசோரம், 55% என்ற பெரிய அளவில் முன்னேற்றத்தையும், எண்ணிக்கை அடிப்படையில் குறைவாக 9,564 முதலீட்டாளர்களையும் பதிவு செய்து உள்ளது.
  • மகாராஷ்டிராவில் சுமார் 1.5 கோடி முதலீட்டாளர்கள் உள்ள நிலையில் அதையடுத்து  உத்தரப் பிரதேச மாநிலமானது 90 லட்சம் முதலீட்டாளர்களுடன் குஜராத் மாநிலத்தினை (77 இலட்சம்) விஞ்சியுள்ளது.
  • மேற்கு வங்காளம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சில்லறை முதலீட்டுப் பங்கு அதிகரித்தது.
  • இந்தியத் தேசியப் பங்குச் சந்தை நிறுவனமானது, வர்த்தகம் செய்யப்படும் பங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்