தேசியப் பஞ்சாயத்து தினம் - ஏப்ரல் 24
April 24 , 2024
215 days
325
- இந்தத் தினமானது பஞ்சாயத்துராஜ் அமைப்புகளை நிறுவிய அரசியலமைப்பு மாற்றத்தை நினைவு கூரும் நாள் ஆகும்.
- பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் அரசாங்கத்தின் மூன்றாம் அடுக்குகளாகக் கருதப் படுகின்றன.
- இது கிராமப்புறங்களில் உள்ளூர் அளவிலான நிர்வாகத்தை மேலாண்மை செய்கிறது.
- முதல் பஞ்சாயத்து இராஜ் அமைப்பு ஆனது 1993 ஆம் ஆண்டில் இந்நாளில் தான் தொடங்கப் பட்டது.
- 1959 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு அவர்களின் தலைமையில் தற்கால இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
- இந்திய அரசியலமைப்பின் 73வது திருத்தச் சட்டம் ஆனது பஞ்சாயத்து இராஜ் அமைப்புக்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது.
Post Views:
325