TNPSC Thervupettagam

தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினம் – ஏப்ரல் 24

April 27 , 2020 1615 days 501 0
  • முதலாவது தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினமானது 2010 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • 1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் பஞ்சாயத்து அமைப்பில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றமானது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் (73 வது திருத்தம்) வடிவில் ஏற்பட்டதாகும்.
  • இந்தச் சட்டமானது 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தில், மத்தியப் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமானது ஒரு தேசியக் கருத்தரங்கை நடத்துகின்றது.
  • இந்த அமைச்சகமானது சிறப்பாக செயல்படும் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு “பஞ்சாயத்து சசாக்திக்கரன் புரஸ்கர்/ராஷ்டிரிய கவுரவ் கிராம் சபை புரஸ்கர்” என்ற விருதினை வழங்குகின்றது.
  • மேலும், இந்த அமைச்சகமானது சிறப்பாகச் செயல்படும் பஞ்சாயத்துகளுக்கு பின்வரும் விருதுகளையும் வழங்குகின்றது.
    • மின்னணு – பஞ்சாயத்து புரஸ்கர்
    • நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கவுரவ் கிராம சபை புரஸ்கர்
    • கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சித் திட்ட விருது
    • தீன தயாள் உபாத்யாய பஞ்சாயத்து சசாக்திக்கரன் புரஸ்கர்
    • குழந்தைகளுக்கு உகந்த கிராமப் பஞ்சாயத்து விருது
  • இந்தியப் பிரதமர் ஒருங்கிணைந்த மின்னணு கிராம சுவராஜ் என்ற இணைய தளத்தையும் மற்றும் அதற்கான ஒரு கைபேசிச் செயலியையும் தொடங்கியுள்ளார். 
  • மேலும் இவர், நிலங்களை ஒருங்கிணைப்பதற்காகவும் நிலப் பிரச்சினைகளைக் குறைப்பதற்காகவும் சுவாமித்வா என்ற ஒரு திட்டத்தையும் தொடங்கியுள்ளார்.
  • இந்தத் திட்டமானது கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்திற்காக, இந்த அமைச்சகமானது மாநில வருவாய்த் துறை, பஞ்சாயத்து ராஜ் துறை, இந்திய நில அளவை ஆய்வு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்