TNPSC Thervupettagam

தேசியப் பஞ்சாயத்து விருதுகள் 2023

April 20 , 2023 458 days 271 0
  • கிராமப் புறங்களுக்கான மேம்பாட்டிற்கு ஒரு மாநில அரசின் முன்னெடுப்புகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வழங்கப் படுகின்ற 2023 ஆம் ஆண்டு  தேசியப் பஞ்சாயத்து விருதுகளின் பல்வேறு பிரிவுகளின் கீழ், தெலுங்கானா 13 விருதுகளைப் பெற்றது.
  • இந்த 13 விருதுகளில், 2021-2022 ஆம் ஆண்டிற்கான தீன் தயாள் உபாத்யாய் பஞ்சாயத்து சதத் விகாஸ் புரஸ்கார் (DDUPSVP) கீழ், தெலுங்கானா எட்டு விருதுகளை வென்றுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு நானாஜி தேஷ்முக் சர்வோத்தம் பஞ்சாயத்து சதத் விகாஸ் புரஸ்கார் (NDSPSVP) விருதின் கீழ் தெலுங்கானா மாநிலத்திற்கு ஐந்து விருதுகள் வழங்கப் பட்டு உள்ளன.
  • DDUPSVP என்பது தனிப்பட்ட கருத்துரு வாரியான செயல்திறனுக்கானது மற்றும் NDSPSVP என்பது அனைத்துக் கருத்துருவின் கீழான ஒட்டு மொத்தச் செயல்திறனுக்கானதாகும்.
  • தேசியப் பஞ்சாயத்து விருதுகள் ஆனது நாடு முழுவதும் உள்ள சிறப்பாகச் செயல்படும் பஞ்சாயத்துகளுக்கு  (உள்ளாட்சி அமைப்புகள்) விருது வழங்கி கௌரவிக்கின்றன.
  • இந்த விருதுகள் முதன்முதலில் 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு, அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன.
  • முந்தைய ஆண்டுகளில், இந்த விருதுகளில் ஒன்றியப் பிரதேசங்களுக்கென ஒரு சிறப்பு ஒதுக்கீடு இருந்தது.
  • எனினும், இந்த ஆண்டு, ஒன்றியப் பிரதேசங்களுக்கென தனி ஒதுக்கீடு எதுவும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்