இது 1966 ஆம் ஆண்டு இதே தேதியில் நடைமுறைக்கு வந்த இந்தியப் பத்திரிக்கை சபையின் (PCI) துவக்கத்தினை நினைவு கூருகிறது.
PCI ஆனது 1965 ஆம் ஆண்டின் பத்திரிக்கைச் சபை சட்டத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக நிறுவப்பட்டது.
நாட்டில் பத்திரிகை நெறிமுறைகளைப் பேணுவதன் மூலம் பத்திரிகைச் சுதந்திரத்தை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சபையானது, பத்திரிகை நெறிமுறைகளுக்கானக் கண்காணிப்புக் குழுவாகச் செயல்படுகிறது மற்றும் ஊடகங்கள் தேவையற்றச் செல்வாக்கு அல்லது வெளிப்புற நெருக்கடிகள் இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்கிறது.