இத்தினமானது, 1966 ஆம் ஆண்டில் இந்தியப் பத்திரிகை சபை (PCI) நிறுவப்பட்டதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
இது பத்திரிகைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும், பத்திரிகையியல் தரத்தை நன்கு பேணிக் காப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பு ஆகும்.
இந்தப் பகுதியளவு நீதித்துறை அமைப்பானது 1978 ஆம் ஆண்டு பத்திரிகைச் சபை சட்டத்தின் கீழ், 1979 ஆம் ஆண்டில் மீண்டும் நிறுவப்பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் ஊடகம்” என்பதாகும்.