2019 ஆம் ஆண்டின் தேசியப் பத்திரிக்கை தினமானது இந்தியா முழுவதும் நவம்பர் 16 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது. இது இந்தியாவில் இருக்கும் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிக்கையின் அடையாளத்தைக் குறிக்கின்றது.
இத்தினமானது ‘இந்தியப் பத்திரிக்கை மன்றம்’ நிறுவப்பட்டதை அனுசரிக்கின்றது.
1966 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1966 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியிலிருந்து தான் செயல்படத் தொடங்கியது.
இந்தியப் பத்திரிக்கை மன்றத்தின் தற்போதையத் தலைவர் நீதிபதி சந்திரமௌலி குமார் பிரசாத் ஆவார்.