TNPSC Thervupettagam

தேசியப் பத்திரிக்கை தினம் – நவம்பர் 16

November 19 , 2022 645 days 229 0
  • இந்தியப் பத்திரிகை மன்றமானது 2022ம் ஆண்டிற்கான தேசியப் பத்திரிக்கை தினத்தை “தேசத்தைக் கட்டமைப்பதில் ஊடகத்தின் பங்கு” என்ற கருத்துருவின் கீழ் அனுசரித்தது.
  • இது இந்தியப் பத்திரிக்கை மன்றத்தைக் கௌரவித்து அதற்கு மரியாதை அளித்திட எண்ணுகின்றது.
  • இந்தியப் பத்திரிக்கை மன்றமானது 1966ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி அன்று நிறுவப் பட்டது.
  • இந்த மன்றமானது வழக்கமாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியால் (நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்) தலைமை தாங்கப்படுகின்றது.
  • இந்தியப் பத்திரிக்கை மன்றமானது, இந்தியப் பத்திரிக்கைகளின் செய்தி வெளியிடும் தரத்தை ஆய்வு செய்வதோடு, பத்திரிக்கைச் செயல்பாடுகளின் மீது ஒரு கட்டுப்பாட்டையும் வைத்துள்ளது.
  • 1956ம் ஆண்டில், முதலாவது பத்திரிக்கை ஆணையமானது, பத்திரிக்கைத் துறையின் நெறியியல் கோட்பாடுகளைப் பராமரிக்கும் பொறுப்புடன் கூடிய ஒரு சட்டப்பூர்வ அமைப்பினை உருவாக்கிட முடிவு செய்தது.
  • பத்திரிக்கையின் தனிச் சுதந்திரத்தைப் பாதுகாத்திட அரசின் கருவிகள் மீது அதிகாரத்தைச் செலுத்தும் ஒரே அமைப்பு இந்தியப் பத்திரிக்கை மன்றம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்