TNPSC Thervupettagam

தேசியப் பறவை தினம் – நவம்பர் 12

November 19 , 2020 1381 days 518 0
  • இது பறவையியல் ஆய்வாளரான சலீம் அலி என்பவரின் பிறந்த தினமாகும்.
  • இவர் 1896 ஆம் ஆண்டில் பம்பாயில் பிறந்தார்.
  • இவர் இந்தியாவின் பறவை மனிதர் என்றறியப் படுகின்றார்.
  • இந்தியா முழுவதும் முறையான பறவை சார்ந்த ஆய்வுகளை நடத்திய முதலாவது இந்தியர் இவராவார்.
  • இவர் பறவையியல் ஆய்வில் புகழ்பெற்ற பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • இந்தியா மற்றும் பாகிஸ்தான் பறவைகளின் கையேடுஎன்பது இவருடைய புகழ்பெற்ற புத்தகமாகக் கருதப்படுகின்றது.
  • இவர் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சமூகம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயம் (கியோலாடியோ தேசியப் பூங்கா) ஆகியவற்றின் உருவாக்கத்திற்குப் பின்னணியில் உள்ள ஒரு முக்கிய நபராக விளங்குகின்றார்.
  • 2016 ஆம் ஆண்டில், இமயமலையின் கிழக்குப் பகுதியில் பொதுவாகக் காணப்படும் இமயமலை காட்டுப் பூங்குருவிக்கு சூதேரா சலீம் அலி என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிரா மாநிலமானது நவம்பர் 05 முதல் 12 ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தை அந்த மாநிலத்தின் பறவை வாரமாகக் கொண்டாடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்