ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி பாதுகாப்பான தாய்மைக்கான தேசிய தினம் (NSMD -National Safe Motherhood Day) அனுசரிக்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டின் NSMD-ன் கருத்துருவானது, “அன்னைகளுக்கான பேறு கால உதவியாளர்” என்பதாகும்.
கஸ்தூரிபாய் காந்தியின் பிறந்த தினத்தின் நினைவாக 2003 ஆம் ஆண்டில் இந்திய அரசு ஏப்ரல் 11 ஆம் தேதியை பாதுகாப்பான தாய்மைக்கான தேசிய தினமாக அறிவித்துள்ளது.
இந்தத் தினமானது பெண்களின் சீரான உடல்நலம், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு வசதிகள், பெண்களிடையே இரத்த சோகையைக் குறைத்தல், மருத்துவமனையில் குழந்தைப் பிறப்பு, பிறப்பிற்கு முன்பு மற்றும் பிறப்பிற்கு பின்பான உடல்நலம் ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.