TNPSC Thervupettagam

தேசியப் பாதுகாப்புப் படை (NSG) நிறுவன தினம் – அக்டோபர் 15

October 21 , 2020 1410 days 424 0
  • தேசியப் பாதுகாப்புப் படையானது (NSG - The National Security Guard) மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சிறப்பு வாய்ந்த ஒரு தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு ஆகும்.
  • இது புளு ஸ்டார் நடவடிக்கை, தங்கக் கோவில் தாக்குதல் மற்றும் இந்திரா காந்தி படுகொலை ஆகியவற்றைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று ஏற்படுத்தப் பட்டது.
  • இது தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுதல் மற்றும் உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து மாநிலங்களைப் பாதுகாத்தல்ஆகிய முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றது.
  • NSG வீரர்கள்கருப்புப் பூனைப் படை வீரர்கள்என்றறியப் படுகின்றனர்.
  • NSG ஆனது தனது பிராந்திய அமைப்பின் கீழ் மும்பை, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் காந்தி நகர் ஆகிய 5 இடங்களில் தனது  பிராந்திய மையங்களை அமைத்துள்ளது.
  • இதன் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் பிளாக் தண்டர், அஸ்வமேத், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், வஜ்ரசக்தி மற்றும் பிளாக் டோர்னாடோ ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்