தேசியப் பாதுகாப்பு மன்றமானது (National Safety Council - NSC) “பாதுகாப்பு” குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசியப் பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கின்றது.
இங்கே “பாதுகாப்பு” என்பது கவனக்குறைவு அல்லது பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக விபத்துக்களைத் தடுப்பதற்கான முறையைக் குறிக்கின்றது.
இந்த ஆண்டின் கருப்பொருள், "மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புச் செயல்திறனை மேம்படுத்துதல்" என்பதாகும்.
தேசியப் பாதுகாப்பு தினத்தின் முதலாவது அனுசரிப்பானது தேசியப் பாதுகாப்பு மன்றம் நிறுவப்பட்ட ஆண்டான 1966 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
இதன் தலைமையகம் மகாராஷ்டிராவின் நவி மும்பையில் அமைந்துள்ளது.