ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 04 ஆம் தேதி தேசியப் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் ராஷ்டிரிய சுரக்ஷா திவாஸ் என்றும் அறியப்படுகிறது.
இத்தினமானது இராணுவ அதிகாரிகள், துணை இராணுவப் படையினர், காவல் துறையினர் மற்றும் கமாண்டோப் படையினர் ஆகிய பாதுகாப்புப் படைகளின் பணியை கௌரவிக்கிறது.
நாட்டிற்காகவும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காவும் எப்பொழுதும் பணியாற்றும் இந்தியாவின் அனைத்து அமைப்புகளுக்காகவும் இத்தினம் அர்ப்பணிக்கப்படுகிறது.
1972 ஆம் ஆண்டில் முதலாவது தேசியப் பாதுகாப்புத் தினம் அனுசரிக்கப்பட்டது. 48-வது தேசியப் பாதுகாப்புத் தினம் இந்தாண்டு கொண்டாடப்பட்டது.