TNPSC Thervupettagam

தேசியப் பாதுகாப்பு (Safety) தினம் – மார்ச் 04

March 7 , 2021 1272 days 387 0
  • தேசியப் பாதுகாப்பு தினமானது முதன்முறையாக 1972 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • இது தேசியப் பாதுகாப்பு ஆணையம் தொடங்கப்பட்டதைக் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது மக்கள் தங்கள் தினசரி வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து பொது  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, சதக் சுரக்சா” (சாலை பாதுகாப்பு) என்பதாகும்.

தேசியப் பாதுகாப்பு ஆணையம்

  • இது 1965 ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று இந்திய அரசின் மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தினால் ஏற்படுத்தப்பட்டது.
  • இது பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து தன்னார்வ இயக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் உருவாக்குவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.
  • இது ஒரு தனிச்சுதந்திர அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்