TNPSC Thervupettagam

தேசியப் பாதுகாப்பு (Security) தினம் – மார்ச் 04

March 7 , 2021 1272 days 498 0
  • இந்தியாவில், இந்தியப் பாதுகாப்புப் படைகளைக் கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 04 ஆம் தேதியானது தேசியப் பாதுகாப்பு தினமாக (ராஷ்டிரிய சுரக்சா திவாஸ்) அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தத் தினமானது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், துணை இராணுவப் படையினர், கமாண்டோக்கள், பாதுகாப்பு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் இதர நபர்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் மரியாதை செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மார்ச் 04 என்ற தினமானது 1966 ஆம் ஆண்டில் இந்தியாவில் தேசியப் பாதுகாப்பு ஆணையம் (NSC - National Security Council) ஏற்படுத்தப்பட்ட தினத்தைக் குறிக்கின்றது.
  • முதலாவது தேசியப் பாதுகாப்பு தினமானது 1972 ஆம் ஆண்டில்  அனுசரிக்கப்பட்டது.

தேசியப் பாதுகாப்பு ஆணையம்

  • தேசியப் பாதுகாப்பு ஆணையமானது இந்தியாவின் பொருளாதார, அறிவியல், மற்றும் உத்திசார் விவகாரங்களைக் கண்காணிக்கின்றது.
  • இது 1998 ஆம் ஆண்டில் இந்தியாவில் அப்போதைய பிரதமரான அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது.
  • NSC ஆனது இந்திய அரசின் கீழ் உள்ள மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்