தேசியப் பால் தினம் டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது.
இவர் ‘இந்தியாவில் வெண்மைப் புரட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.
உலகின் மிகப்பெரிய வேளாண் திட்டமாக அறியப்படும் அவரது ‘ஆபரேஷன் ஃப்ளட்’ என்ற நடவடிக்கை மூலம் புகழ் பெற்றவர்.
அமுல் தயாரிப்பின் ஸ்தாபனத்திலும் அதன் வெற்றியிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
ஆபரேஷன் ஃப்ளட் என்ற நடவடிக்கையானது 1970 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
இது உலகின் மிகப்பெரிய பால்வள மேம்பாட்டுத் திட்டமாகும்.
1998 ஆம் ஆண்டில் அமெரிக்காவை விஞ்சி மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா மாறியது.
தற்போது, இந்தியாவின் பால் உற்பத்தித் துறையானது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5% பங்களிப்பதன் மூலம், மிகப்பெரிய தன்னிறைவு பெற்ற துறைகளில் ஒன்றாக உள்ளது.